அன்புள்ள நண்பர்களே,
        வாசகர்- படைப்பாளி-வாசகர்-விமர்சகர் என 1970களிலிருந்து தமிழ் சிற்றேடுகள், தீவிரமான இலக்கிய இதழ்கள் முனைப்பான படைப்பிலக்கிய தளத்தை உருவாக்கியுள்ளன.. இம்முனைப்பு காரணமாக படிப்புத்திறனும், படைப்புத்திறனும் வலுப்பெற்றன.. இத்தொடர் முயற்சியில் ‘தளம்’ கலை இலக்கிய இதழும் 2013ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்பட்டுவருகிறது.. வலுவான, முனைப்பான, தீவிரமான வாசக தளங்களை தமிழ் இளைஞர்களிடையே உருவாக்கி , கூர்மையான விவாதங்கள் மூலம் திக்குத்தெரியாத எழுத்தாக படைப்பிலக்கியம் செல்லும் நிலையிலிருந்து மீட்டு நோக்கப்படுத்துவது சாத்தியம் என தளம் கருதுகிறது.. இம்முயற்சியில் மேலும் உரிய தளத்திற்கு எடுத்துச்செல்ல புதிய/இளம் படைப்பாளிகளை தளம் வரவேற்பதுடன் அவர்கள் வசம் இத்தளத்தை மற்றித்தந்து செல்ல, முனைப்பான வாசகர்களின், விமர்சகர்களின், படைப்பாளிகளின் உறுதுணையை தளம் எதிர்நோக்குகிறது.
முரண்படுதலுக்கான காரணங்களைக் காட்டிலும் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை எனும் நிலைப்பாட்டில், 
                                                                                                                   தளம்
                                                                                      செல்-9445281820
                                                                                                                           போன்-044-28485000
                                                                                                        thalam.base@gmail.com